மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(25) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் பிற்பகல்- 05.30 மணி முதல் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்திற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்தததைத் தொடர்ந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் நல்லூர்த் தொகுதி வேட்பாளர் வாசுகி சுதாகர் நினைவுச் சுடர் ஏற்றிவைத்தார்.
நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மலரஞ்சலியும்இ நினைவுரைகளும் இடம்பெற்றன.
0 comments:
Post a Comment