//]]>

Saturday, March 10, 2018

சமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி



உண்மை ஊரை வலம் வரும் முன் பொய் உலகை சுற்றி வந்துவிடும்' என்று கூறுவார்கள்..சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளைவிடப் பொய்யான செய்திகளே மிக விரைவாகவும், அதிகமாகவும் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. 11 ஆண்டுகளில் சுமார் 1,26,000 பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில், மக்கள் உண்மையான செய்தியை விடப் பொய்யான செய்தியை அதிகமாக நம்புவதாகவும், இதனால் அவர்கள் பொய்யான செய்தியைச் சமூக ஊடகங்களில் மிக விரைவாகப் பகிர்வதும் தெரியவந்துள்ளது. ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன. உண்மையான செய்திகள் 1000 பேரைச் சென்றடைகின்றன. அதே நேரத்தில் பொய்யான செய்திகள் 1,00,000பேரை சென்றடைகின்றன. உண்மையை விடப் பொய்யான செய்திகள் 70% அதிகமாகப் பகிரப்படுகின்றன.

மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாகச் செய்திகளை விரும்புவதே பொய்யான செய்திகளைப் பகிர்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. அவர்களுக்கு வரும் செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை அவர்கள் பகிர்ந்து விடுகின்றனர். அரசியல் செய்திகள் பொய்யாகப் பகிரப்படுகிறது. இது போன்ற பொய்யான செய்திகளில் அரசியல் செய்திகள் அதிகளவில் உள்ளது. அது தவிர, நகர்ப்புற கதைகள், வணிகம், பயங்கரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கைப் பேரழிவுகள் குறித்துப் பொய்யான செய்திகள் பகிரப்படுகிறது.

ஆராய்ச்சியின் சக ஆய்வாளரான பேராசிரியர் சினான் ஆல், “தவறான செய்தி மிகவும் சுவாரஸ்யமான கதை போன்றது. எனவே அது மக்களால் அதிகம் பகிரப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Sunday, June 11, 2017

மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?


இன்றைக்கு மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்வது அதிகரித்து வருக்கிறது. இந்தப் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க மண்புழு உரம் அல்லது மண்புழு எரு பயன்படும். இந்த உரத்தை செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.

இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில், தொட்டியில், குழியில் போட்டு வைக்கவும்.

கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.

அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.

மண்புழு குளியல் நீர்

மண்புழு உரத்தைப் போலவே, மண்புழு குளியல் நீரும் பயிர்களுக்கு ஊட்டம் தரும். மண்புழு உரம் உள்ள தொட்டியில் தண்ணீரைச் சொட்ட விடுவதன் மூலம் மண்புழு குளியல் நீரைத் தயாரிக்க முடியும். சொட்டும் நீர் கீழே இறங்கும்போது, மண்புழுவின் உடலில் சுரக்கும் திரவத்தையும், எருவில் உள்ள சத்துகளையும் கழுவிக்கொண்டு கீழே வந்து சேரும். இந்த மண்புழு குளியல் நீரை அன்றாடம் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.

மண்புழு குளியல் நீரை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு லிட்டர் மண்புழு குளியல் நீர் கிடைத்தால், அத்துடன் 10 லிட்டர் நல்ல தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்து, அதை பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும்.

நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கையேடு

Thursday, June 1, 2017

தவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம்!- வாட்ஸ் அப் புதிய வசதிகள்


வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடவும் வாட்ஸ்அப் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்அப் - புதிய வசதிகள்

வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், டெஸ்ட்டர்களுக்கான பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தி சோதிப்பது வழக்கம். அதன்பின் தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version - 2.17.210), அசத்தலான சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

மெஸேஜை திரும்பப்பெறலாம் :

வாட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு, அதை நீக்கவோ அல்லது திரும்பப்பெறவோ முடியாமல் சிரமப்பட்டிருப்போம். மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பியவரின் சாட்டில் மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர் மொபைலில் அந்த மெஸேஜ் அப்படியே இருக்கும். பீட்டா வெர்ஷனில் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வாட்ஸ்அப். மெஸேஜை திரும்பப்பெற்றுக்கொள்ள 'Unsend' என்ற ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரும்பப்பெற நினைக்கும் மெஸேஜை செலக்ட் செய்ததும், திரையின் மேலே மெனு ஒன்று தோன்றும். அதில் 'Unsend' ஆப்ஷனை கிளிக் செய்தால், உடனடியாக மெஸேஜ் திரும்பப்பெறப்படும். ஆனால், மெஸேஜ் அனுப்பி ஐந்து நிமிடங்களுக்குள் மட்டுமே அதைத் திரும்பப்பெற முடியும். அதற்கு மேல் நேரமாகியிருந்தால் மெஸேஜை திரும்பப்பெற முடியாது. ரிசீவர் மொபைலில் இருந்தும் அந்த மெஸேஜ் உடனடியாக நீக்கப்பட்டு, அன்சென்ட் செய்யப்பட்ட விவரம் மட்டும் தெரிவிக்கப்படும்.

லைவ் லொக்கேசன் :

வாட்ஸ்அப்பில் ஓர் இருப்பிடத்தின் மேப்பை எளிதாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய லொக்கேசன் ஆப்ஷன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மேப்பில் குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இதேபோல, நடமாடும் ஒரு நபரின் அப்போதைய இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் 'லைவ் லொக்கேசன்' ஆப்ஷனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது லைவ் லொக்கேசனை மற்றொரு நபருக்கு அனுப்பினால், அதன் மூலம் அந்நபர் பயணிக்கும் இருப்பிடங்களின் லொக்கேசனை அறிந்துகொள்ள முடியும். பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் லைவ் லொக்கேசனைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் :
வாழ்வின் அத்தனை இனிமையான தருணங்களையும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தான் தற்போதைய ட்ரெண்ட். புகைப்படம், வீடியோ, Gif போன்ற எந்த ஃபார்மட்டிலும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். 24 மணிநேரம் இந்த ஸ்டேட்டஸை மற்றவர்களால் பார்க்க முடியும். இந்த பீட்டா வெர்ஷனில் டெக்ஸ்ட் (Text) வடிவில் கலர் பேக்ரவுண்ட் உடன் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெஸேஜில் Bold, Italic, Strike Through போன்ற எழுத்துருவின் வடிவங்களை மாற்றிக்கொள்வது போல, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸிலும் மாற்றிக்கொள்ளலாம்.


இவை அனைத்தும் தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயனாளிகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், Unsend வசதியானது ரூட் அக்சஸ் கொடுத்தபின், Xposed framework இன்ஸ்டால் செய்தால் மட்டுமே வேலை செய்யும். அனுப்புனரும், பெறுநரும் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தினால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். இந்த வசதிகள் சில மாற்றங்களோடு விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Thursday, December 29, 2016

சிறீலங்கா ரெலிகொம் அழைப்புக்கள், இணையசேவைகள் இலவசம்: அதிரடி அறிவிப்பு


இலங்கை தொலைத்தொடர்பு சேவையான சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும்  ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்களுக்கான (லாண்ட் லைன்) SLT- SLT உள்ளக அழைப்புக்கள்  புத்தாண்டுப் பரிசாக 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதும் இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அன்றைய தினத்திற்குரிய சேவைக்கடடணம்  கட்டணப்பட்டியலில் சேராது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஒரு    நாள் மட்டும்தான்.

அன்றைய தினத்திற்கான அதிகூடிய  Data பாவனை  எல்லை 500GB ஆக இருக்கும் எனவும் சிறீலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Sunday, December 18, 2016

விரைவில் வருகிறது OnePlus 4 ஸ்மார்ட் போன்


OnePlus நிறுவனம் அதன் புதிய OnePlus 4 என்ற ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்தியுள்ளது. Dual Sim கொண்ட Nubia N1 ஸ்மார்ட்போனில் Android v7.0 (Nougat) மூலம் இயங்குகிறது. OnePlus 4 ஸ்மார்ட்போனில் 1920×1080 Pixels கொண்ட 5.5 ” Full HD Display இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 8 GB RAM உடன் இணைந்து Quad Core Snapdragon 830 processor மூலம் இயக்கப்படுகிறது.

 இதில் Micro SD Card வழியாக 128GB வரை நீடித்துக்கொள்ளும் வசதியுடன் 64 GB internal storage வருகிறது. OnePlus 4 ஸ்மார்ட்போனில் LED Flash கொண்ட 16 Megapixels கொண்ட ரியர் கேமரா மற்றும் 8 Megapixels செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

OnePlus 4 ஸ்மார்ட்போனில் 4000 mAh battery, Wi-Fi 802.11 a/b/g/n, A-GPS, Bluetooth 4.10, 3.5mM Audio Jack, 4G VOLTE மற்றும் Micro-USB ஆகியவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மேலும் சிறப்பம்சங்களாக Eye Scanner, FingerPrint Sensor ஆகியவை உள்ளன.

Friday, December 16, 2016

பஜாஜின் புதிய 400சிசி பைக்கின் விலை இவ்வளவுதானா?


இந்திய பைக் மார்க்கெட்டில், பட்ஜெட் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைப் பொறுத்தவரை, பஜாஜின் பல்ஸர் பைக்குகளைப் போல, அதிக ரசிகர்களை வேறு எந்த தயாரிப்பும் கவர்ந்ததில்லை. பல்ஸர் அறிமுகமாகி 15 வருடங்கள் ஆன நிலையில், மீண்டும் அனைவரது பார்வையையும், தனது பக்கம் திருப்பியுள்ளது பஜாஜ்.

Dominar என்ற பெயருடைய 400சிசி பைக்கை, 1.36 - 1.50 லட்சத்துக்கு (இந்திய பணப் பெறுமதியில்) (Non ABS/ABS - டெல்லி எக்ஸ் ஷோரும் விலை) பஜாஜ் இன்று அறிமுகப்படுத்தியது. எனவே ஒரு புதிய பிராண்டின் முதல் பைக்காக Dominar களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய 400சிசி பைக்கின் தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக துவங்கிவிட்டன. அதில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், பைக்கின் அசெம்பிளி லைனில் இருக்கும் அனைவரும் பெண்கள் என்பதுதான்!

பஜாஜின் பவர்ஃபுல்லான, விலை உயர்ந்த பைக்காக, Dominar பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் கேடிஎம் டியூக் 390 / RC 390 பைக்கில் இருக்கும் அதே லிக்விட் கூலிங், 4 வால்வு DOHC, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தைக் கொண்டுள்ள 373.3சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - ஸ்லிப்பர் கிளட்ச் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் பஜாஜ் பைக்குகளுக்கே உரித்தான Triple Spark Plug தொழில்நுட்பத்தின் உதவியுடன்,  35bhp@8000rpm பவரையும், 3.5kgm@6,500 டார்க்கையும் வெளிப்படுத்தும் விதத்தில் இன்ஜின் ரி-ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் Low End Torque சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 8.23 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் Dominar, அதிகபட்சமாக 148 கிமீ வேகம் வரை செல்லும் என்கிறது பஜாஜ்.

கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பல்ஸர் CS400 என்ற பைக்கை பஜாஜ் காட்சிப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த கான்செப்ட் பைக்கில் இருந்த ஆட்டோமேட்டிக் LED ஹெட்லைட் - LED இண்டிகேட்டர் - LED டெயில் லைட், ஸ்பிளிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை தொடர்கின்றன. ஆனால் முன்பக்க USD ஃபோர்க்குக்குப் பதிலாக, தடிமனான 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 110/70 R17 MRF ரேடியல் டயர்களும், பின்பக்கம் 150/60 R17 MRF ரேடியல் டயர்களும் Dominar பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 157 மிமீ மற்றும் பெட்ரோல் டேங்க் அளவு 13 லிட்டர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் ஒற்றை இருக்கை, இருவர் வசதியாக உட்கார்ந்து செல்லும்படியான ஸ்பிளிட் சீட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் இருபுறமும் இருக்கும் பெட்டல் டிஸ்க் பிரேக் (முன்பக்கம் 320 மிமீ - பின்பக்கம் 230 மிமீ) செட்-அப்பிற்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் அளிக்கப்பட்டுள்ளது ப்ளஸ். ஹோண்டா CBR250R, மஹிந்திரா மோஜோ, ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் - தண்டர்பேர்டு - ஹிமாலயன் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கப்போகிறது Dominar 400சிசி பைக். தற்போது அடுத்த ஆண்டில் வரவிருக்கும் BS-IV மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தனது பைக்குகளை மேம்படுத்தி வரும் பஜாஜ் நிறுவனம், அதில் அவென்ஜர் மற்றும் பல்ஸர் சிரீஸ் பைக்குகளை ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டது. அவை பஜாஜ் டீலர்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் Dominar பைக்கின் புக்கிங் ஆன்லைனில் (9000 ரூபாய்) துவங்குவதுடன், 22 நகரங்களில் இருக்கும் தனது டீலர்களில் Dominar காட்சிக்கு வைக்கப்படும் என பஜாஜ் கூறியுள்ளது. டெலிவரிகள்  ஜனவரி 2017 முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பைக்கிலே முதன்முறையாக, LED ஹெட்லைட், முழுக்க டிஜிட்டல் மீட்டர்கள், ட்வின் சேனல் ஏபிஎஸ், ஸ்லிப்பர் கிளட்ச், ரேடியல் டயர்கள் ஆகியவை இருப்பது, 182 கிலோ எடையுள்ள இந்த 400சிசி Dominar பைக்கில்தான்! தவிர கடல் மட்டத்திலிருந்து சுமார் 18380 அடி உயரத்தில்கூட இந்த பைக் சிக்கலின்றி இயங்கும் என்கிறது பஜாஜ். கடந்த 2001-ல் பல்ஸரின் வருகைக்குப் பின்பு, எப்படி பட்ஜெட் பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டானதோ, அதே போல இந்த Dominar பைக்கும் ஒரு டிரெண்ட் செட்டராக இருக்கப்போவது நிச்சயம்! இதனைத் தொடர்ந்து, ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகளைக் கவரும்படியான RS400 பைக்கையும், அட்வென்ச்சர் பிரியர்களுக்கான பைக்கையும், வருங்காலத்தில் பஜாஜ் தயாரிக்கும் என நம்பலாம்.




Monday, November 21, 2016

கடவுச்சொல்லை கண்டுபிடிக்கும் மென்பொருள்


இணையத்தில், ஒருவர் பல்வேறு தளங்களுக்கு பன்படுத்தும், 'பாஸ்வேர்ட்' எனப்படும், கடவுச்சொற்களை சரியாக ஊகிக்க முடியுமா? இணையக் களவாணிகளால் முடிகிறது.

அவர்களை தடுக்கும் நடவடிக்கையாக, இப்போது கடவுச்சொற்கள் பாதுகாப்பு குறித்து, மென்பொருள் வல்லுனர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். லங்காஸ்டர் பல்கலைக்கழகம், பீகிங் பல்கலைக்கழகம் மற்றும் பியூஜி நார்மல் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த கணித மற்றும் கணினி ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆராய்ந்து, 'டார்கெஸ்' என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

டார்கெஸ், பெயருக்கேற்றபடி முன்பின் தெரியாத, 100 பேரின் கடவுச்சொற்களில், 72 பேருடையதை சரியாக கண்டுபிடித்து விடுகிறது. சற்று பாதுகாப்பான கடவுச்சொற்களை உருவாக்குபவர்களில்கூட, 32 பேருடையதை டார்கெஸ், சரியாக கண்டுபிடித்துக் காட்டியது.

ஆய்வாளர்களின் நோக்கம், இணையத்தில் திருடுவது அல்ல. இணையக் களவாணிகளைப் போல யோசித்து, அவர்கள் அப்பாவிகளிடம் திருட முடியாதபடி தடுப்பது தான்.

'இன்றைக்கும் பலர், எளிதில் ஊகிக்கக்கூடிய கடவுச் சொற்களை வைத்திருப்பதும், எல்லா இணையக் கணக்கு களுக்கும், ஒரே கடவுச் சொற்களை பயன்படுத்துவதும் தான் இணையக் களவாளிகளுக்கு வேலை சுலபமாகிவிடுகிறது' என, மூன்று பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டார்கெஸ் மென்பொருள் ஆய்வுக்கு, 'யாஹூ' கடவுச்சொல் திருட்டு போன்றவற்றில் அம்பலப்படுத்தப்பட்ட, கடவுச் சொற்களை ஆய்வாளர் கள் பயன்படுத்தினர். 'பாஸ்வேர்ட்' என்ற ஆங்கிலச் சொல்லையே கடவுச்சொல்லாக வைத்திருப்பது போன்ற, பரவலாக உள்ள வழக்கங்களை, டார்கெஸ் எளிதில் கண்டுபிடித்து சொல்லிவிட்டது.

எளிதில் ஊகிக்கக்கூடிய கடவுச்சொற்களை தவிர்ப்பது, அடிக்கடி கடவுச்சொற்களை மாற்றுவது, சிக்கலான கடவுச்சொற்களை உருவாக்கி பயன்படுத்துவது ஆகியவை, நல்ல வழக்கங்கள் என, தங்கள் ஆய்வுக் கட்டுரையில், 'டார்கெஸ்' ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Friday, November 18, 2016

குழந்தைகளுக்கும் யூ டியூப்


இப்போதெல்லாம் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அடம் பிடிக்காமல் சாப்பிட வைக்கவும், திறன்பேசி அல்லது பலகைக் கணினியில் யூ டியூப் காணொளிகளை போட்டுக் காட்டுவதுண்டு.

அப்போது, 'இதையும் பார்க்கலாமே' என, யூ டியூப் திரையின் வலதுபக்கம் காட்டும் காணொளிகளில், ஏதாவது ஆபாசமாக வந்து தொலைக்கும்.

இதை தவிர்க்க இந்தியாவிலும், 'யூ டியூப் கிட்ஸ்' சேவை அறிமுகமாகியுள்ளது. இந்த செயலியை தரவிறக்கம் செய்தால் பெற்றோருக்கு நிம்மதி.


Thursday, November 10, 2016

மேம்பட்ட குரோம்


உலகெங்கும் திறன்பேசிகள் மூலமே பெரும்பாலானோர் இணையத்தை அணுகுகின்றனர். எனவே கூகுள், தன், 'குரோம்' வலை உலாவியை திறன்பேசிகளுக்காக மேம்படுத்தியுள்ளது.

இப்போது திறன்பேசிக்கான குரோம், 15 சதவீதம் வேகமாக தரவிறக்கம் செய்கிறது. மேலும், திறன்பேசியின் மின் சக்தியை சிக்கனமாக செலவிடுகிறது. உதாரணமாக ஐபோன் இயங்குதளத்தில், 33 சதவீதம் வரை மிச்சம் செய்கிறது. காணொளி படத்துணுக்குகளை வேகமாக தரவிறக்கம் செய்வதோடு, தரவிறக்கம் செய்த காணொளிகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்க்கவும் குரோம் உதவும். '2ஜி' போன்ற மந்தமான இணைப்புகளில், ஒரு இணைய தளத்தின் தேவையான தகவல்களை மட்டும் வேகமாக தரவிறக்கம் செய்யும், 'டேட்டா சேவர்' வசதியையும் குரோம் நடைமுறைப்படுத்தி இருக்கிறது.


Thursday, November 3, 2016

டாடா ஹெக்ஸா ஜனவரி 16ல் விற்பனைக்கு வருகிறது


பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாடா ஹெக்ஸா கார் வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி முதல்  விற்பனைக்கு வருகிறது .

இந்த காருக்கான முன்பதிவை டாடா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்கள் மூலமாக புதிய ஹெக்ஸா காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகிறது. ஏதேனும் காரணங்களால் முன்பதிவை ரத்து செய்தால் வாடிக்கையாளர்கள் முன்பணத்தை முழுவதுமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இன்னும் சில தினங்களில் வாடிக்கையாளர்கள் சோதிர்த்து பார்க்க, டெஸ்ட் டிரைவ் கார்கள் டீலர்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 154 பிஎச்பி பவரை அளிக்க வல்ல சக்திவாய்ந்த 2.2 லிட்டர் டீசல் எஞ்சின், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் என்று இதயத்துடிப்பை எகிற வைக்கும் நிஜமான டீசல் எஸ்யுவியாக இருக்கும் என டாடா நிறுவனம் இந்த மாடலை விளம்பரம் செய்கிறது

டாடா ஹெக்ஸா காரின் விலை சுமார் ரூ.11 லட்சம் முதல் 17 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்களுக்கு நிச்சயம் போட்டியாக அமையும்