யாழ். ஆரியகுளம் சந்திப் பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(15) பிற்பகல் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். நகரிலிருந்து ஸ்ரான்லி வீதியூடாகப் பயணித்த பாரவூர்தி சந்தியில் சிவப்புச் சமிக்ஞை விழுந்தததையடுத்து அவ்விடத்தில் நின்றுள்ளது. பின்னர் பச்சைச் சமிக்ஞை விழுந்ததையடுத்துக் குறித்த பாரவூர்தியைச் சாரதி பலாலி வீதிக்குத் திருப்பியுள்ளார். அப்போது குறித்த பாரவூர்திக்கு அருகாக இடதுபக்கமாக நின்ற மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் நேராக அத்தியடிப் பக்கம் நோக்கி மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்த முற்படவே
பாரவூர்தியின் பின்பக்கமாக மோதுண்டு பயங்கர விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் குறித்த மோட்டார்ச் சைக்கிள் பாரவூர்தியின் பின்சில்லுடன் நசியுண்டு கடும் சேதத்திற்குள்ளான போதும் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரும், பின்னால் அமர்ந்து சென்ற யுவதியும் காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
காயமடைந்த இருவரும் பொதுமக்களால் மீட்கப்பட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.






0 comments:
Post a Comment