வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தர அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை வெளிப்படுத்தக் கோரித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றுச் சனிக்கிழமை(24) ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்றுக் காலை வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களைப் பார்த்து ஒப்பாரி வைத்து கதறி அழுதனர்.
இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கிச் சென்ற அவர்கள் அங்கு இருவரது உருவப்பொம்மைகளுக்கும் இறுதிக்கிரியைகள் மேற்கொண்டு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.




0 comments:
Post a Comment