//]]>

Tuesday, January 3, 2017

யாழில் 'நாடகப் பெருவிழா'

''ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி'' என மகாகவி பாரதியால் வரவேற்கப்பட்ட 1917 ஆம் ஆண்டு ரஸ்யாவில் இடம்பெற்ற மகத்தான ஒக்ரோபர் சோசலிஷப் புரட்சியின் நூற்றாண்டை வரவேற்கும் முகமாகக் காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 03, 04, 05 ஆம் திகதிகளில் நாடகப் பெருவிழா நடாத்தப்படுகின்றது.

இந்தப் பெருவிழாவில் முதல் நாளான  இன்று செவ்வாய்க்கிழமை(03) செம்முகம் ஆற்றுகைக் குழு வழங்கும் 'எனக்கும் வலிக்கும்' எனும் சிறுவர் நாடகமும், 'மனச்சிறை' எனும் நவீன நாடகமும், 'கோமாளிகள்' எனும் சிறப்பு ஆற்றுகையும் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் நாளான நாளை-04 ஆம் திகதி  புதன்கிழமை நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பில் உருவான கிரேக்க அவலச்சுவை நாடக ஆசிரியர் சோஃபகிளிஸ் அவர்களின் 'அன்டிகனி' நாடகம் இடம்பெறவுள்ளது. இந்நாடகத்தைக் குழந்தை ம. சண்முகலிங்கம் தமிழாக்கம் செய்துள்ளதுடன் நெறியாள்கையை யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் க. ரதிதரன் மேற்கொண்டுள்ளார்.

மூன்றாம் நாளான ஜனவரி- 05 ஆம் திகதி வியாழக் கிழமை அன்று இணுவில் இளந்தொண்டர் சபையினர் வழங்கும் 'சத்தியவான் சாவித்திரி' இசைநாடகம் மற்றும் வைபிறேற் நடனக் குழு வழங்கும் 'புத்தாக்க நடனம்' என்பனவும் இடம்பெறவுள்ளன.

குறிப்பிட்ட தினங்களில் மாலை-06  மணி முதல் காலையடி, பண்டத்தரிப்பிலுள்ள மறுமலர்ச்சி மன்றத்தின் தியாகராஜா மகேந்திரன் குடும்ப ஞாபகார்த்த உள்ளரங்கில் இடம்பெறவுள்ள இந்த நாடகப் பெருவிழாவில் நாடக, கலா இரசிகர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு மறுமலர்ச்சி மன்றத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment