//]]>

Tuesday, January 3, 2017

வடக்கு பதில் முதலமைச்சராக ஐங்கரநேசன்( Photos)

வடக்குமுதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்  இலண்டன்,மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக இன்று செவ்வாய்க்கிழமை(03) யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 

இந்தப் பதில் முதலமைச்சர் பதவி எதிர்வரும் மூன்று வாரத்திற்கு நீடிக்கும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

இதேவேளை ,வடக்கு முதலமைச்சர் எதிர்வரும்-18 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment