//]]>

Thursday, March 8, 2018

சென்னையில் குறும்பட விழா




சென்னையில் உள்ள ஆசான் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 12-ஆவது ஆசான் திருஷ்யா குறும்பட விழா அண்மையில் நடைபெற்றது. தேசிய அளவிலான குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கி இந்த விழாவில் இளம் படைப்பாளர்கள் கெளரவிக்கப்பட்டு வருகிறார்கள்.



 இந்த ஆண்டு (2018) இந்த குறும்பட விழாவுக்கு ஆரம்பம், பில்லா உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் விஷ்ணு வர்தன் தலைமை தாங்கி சிறப்பித்தார். மேற்கண்ட பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த குறும்பட குழுவினருக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார். ஆசான் கல்லூரி காட்சித் தொடர்பியல் (விஸ்காம்) துறை மாணவர்கள், விழாவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment