//]]>

Tuesday, August 1, 2017

உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட இருபது பண்ணையாளர்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்(Photos)


வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருபது பண்ணையாளர்களுக்கு மாட்டுக் கொட்டகைகள் அமைப்பதற்கான உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு  இன்று  செவ்வாய்க்கிழமை(01) முற்பகல்- 10.30 மணி முதல்  யாழ். சுன்னாகத்தில் அமைந்துள்ள உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக முன்றலில் உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ். சி. விமலகுமார் தலைமையில்இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் போது உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இருபது பயனாளிகளுக்குத் தலா- 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கூரைத் தகடுகள், சீமெந்து, கொங்கிறீட் தூண்கள் போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயனாளிகளுக்கான உதவித் திட்டங்களை வழங்கி வைத்தார்.

இந்த உதவித் திட்டம் பாலுற்பத்தியைப் பெருக்கித் தம் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஆர்வம் கொண்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ். சி. விமலகுமார் தெரிவித்துள்ளார். பண்ணையாளர்களின் சொந்தச் செலவில் கொட்டகைகள் பூரணப்படுத்தப்பட வேண்டுமெனவும்,  பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment