//]]>

Wednesday, December 20, 2017

தமிழீழப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை மண்ணிலிருந்து மாற்றம் ஆரம்பமாக வேண்டும்: சட்டத்தரணி சுகாஸ் அறைகூவல்(Video)

தமிழீழப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டவட்டுக்கோட்டை மண்ணிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறோம். அதற்கான ஆணையினைத் தமிழ் மக்கள் வழங்க வேண்டும் எனச் சட்டத்தரணி க.சுகாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். வலிகாமம் மேற்குப் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காகச்   சட்டத்தரணி க.சுகாஸ் வேட்புமனுவினை யாழ்.உதவி தேர்தல் ஆணையாளரிடம் இன்று புதன்கிழமை(20) கையளித்தார்.

வேட்பு மனுவைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது 2010 ஆம் ஆண்டு முதல் மாற்றத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது முக்கியமான காலகட்டமாகும். அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ள இந்தக் காலகட்டத்தில் உள்ளூராட்சி அபிவிருத்தியுடன் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆரம்பப் புள்ளியாக இந்தத் தேர்தலை நாம் பார்க்கின்றோம்.

தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் அத்துமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே, இதற்கு மேலும் தமிழ் மக்கள் பொறுத்திருந்தால் தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

வட்டுக்கோட்டை மண்ணானது வரலாற்று ரீதியில் தமிழ்மக்களின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய மண்ணாகும். அந்த மண்ணிலே தமிழீழப்  பிரகடனம் செய்யப்பட்டது. அவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்ணிலிருந்து மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment