//]]>

Monday, June 12, 2017

கல்வி பொன்மொழிகள்


* ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!- காந்தியடிகள்

* "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!" - தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்விகற்றல் வேண்டும். - இலக்கியம்

*  மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்; ஒவ்வொருவரும் ஒரு ஆக்கராக முடியும் - அவர்களின் தடயத்தை இவ்வுலகில் விட்டுச் செல்ல முடியும்.
காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் - கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல. --- வாசிலி சுகோம்லின்ஸ்கி

* ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது.-மகா கவி பாரதி

* கல்வி விரல்களுக்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை. - கவிஞர் வைரமுத்து

* தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல. - கவிஞர் வைரமுத்து

* கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும். - தந்தை பெரியார்

* இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்! - யூரிபிடிஸ்

* கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்! - பிளேட்டோ

* கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்! - எட்மண்ட்பர்க்

* கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்! - ரஸ்கின் பாண்ட்

* வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது! - பெர்னார்ட்ஷா

* நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்! - மூர்

* சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்! - போலிங் புரூக்

* தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி! - பெஸ்டலசி

* ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி! - ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்

* ஆசிரியர்களே மாணவர்களோடு விளையாடுங்கள், ஒருபோதும் விளையாட்டை வழி நடத்தாதீர்கள்- ஆண்டன் மக்கரென்கோ

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

3 comments:

Post a Comment