எதிர்வரும் பெப்ரவரி-10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் புதன்கிழமை(17) வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
முற்பகல்- 09.30 மணி முதல் யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெறவுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது தமிழர் சமஉரிமை இயக்கம், நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை எனும் கூட்டினை அமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment