//]]>

Saturday, March 11, 2017

வடக்கின் பெரும் போரின் இறுதி நாள் இன்று!- வெல்லப் போவது யார்?


வடக்கின் பெரும் போர் எனப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 108 ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் கடந்த வியாழனன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அணித்தலைவராக கே.ஜீனுஸ்கஸ்ரன், சென்ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவராக பி.துவாரகசீலன் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

சென்ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக, பி.துவாரகசீன் (அணித்தலைவர்) ஜி.ஆப்ரகாம் அனோஜன் (உபஅணித்தலைவர்) ஏ.கானாமிர்தன், எஸ்.கபில்ராஜ், ஆர்.லோகதீஸ்வர், எம்.நிலோஜன், ஆர்.பிரியசங்கர், எஸ்.ஜெனிபிளமின், எஸ்.துவாரகன், ஜே.கிஷாந்துஜன், வி.ஜதுன், ஆர்.செலுமியஸ் ரி.சிவதர்சன், ஆர்.விதுர்ஜன், ஏ.ஹெரோல்ட்லஸ்கி, எம்.சிந்துஜன், ரி.கஜீபன், எஸ்.பிரவீன்சன், கே.கபில்ராஜ், சி.தேவபிரசாந் விளையாடுகின்றனர்.

யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அணி சார்பாக கே.ஜீனுஸ்கஸ்ரன் (அணித்தலைவர்), எஸ்.சௌமிதரன் (உபஅணித்தலைவர்), ஆர்.பிரியந்தன், எவ்.ஜெயந்திரன், பி.நிருபன், ஏ.தனுசன், ஜி.நிதுஷன், கே.சஞ்சயன், பி.நிரேயன், ஈ.கிஷாந், எஸ்.மதுசன், ஏ.டேவிட், ஏ.பிரியலக்ஷன், எஸ்.செந்தூரன், கே.ரசிரூபன், வி.டினோஜன், ஏ.எஸ்.அலன்ராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர்.

இறுதியாக நடைபெற்ற 5 போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் இறுதி 2 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.

இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் சென்ஜோன்ஸ் கல்லூரி 33 வெற்றிகளையும், மத்திய கல்லூரி 27 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

39 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்ததுடன் 7 போட்டிகள் முடிவு இல்லாதவையாகவும், 1 போட்டி கைவிடப்பட்டதாகவும் உள்ளது.

இப்போட்டியில் அதிகூடிய ஓட்டங்களாக சென்ஜோன்ஸ் கல்லூரி 6 விக்கட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை 1996ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டது.

யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி 9 விக்கட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களை 1993 ஆம் பெற்றுக்கொண்டது. 

கடந்த வியாழனன்று தொடக்க நிகழ்வின் போது எடுக்கப் பட்ட படங்கள்,  






















































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment