யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும், கரிகணன் நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் 'நாவலர் விழா' நாளை சனிக்கிழமை( 24.12.2016) காலை- 9 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் தொடக்கவுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்துவார்.
"நாவலரின் தொலைநோக்கு" எனும் பொருளில் ஓய்வு நிலைப் பேராசிரியர் கலைவாணி இராமநாதன் தலைமையில் நடைபெறும் ஆய்வரங்கில் 'நாவலரின் தொலைநோக்கில் சமயம்' என்ற பொருளில் இந்துநாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசனும் 'நாவலரின் தொலைநோக்கில் கல்வி' என்ற பொருளில் இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜாவும், 'நாவலரின் தொலைநோக்கில் மொழி' என்ற பொருளில் இந்நுநாகரிகத்துறை விரிவுரையாளர் தி.செல்வமனோகரனும், 'நாவலரின் தொலைநோக்கில் பண்பாடு' என்ற பொருளில் இந்து நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரனும், 'நாவலரின் தொலைநோக்கில் சமூகம்' என்ற பொருளில் சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ச.ஸ்ரீகாந்தும் ஆய்வுரைகளை ஆற்றவுள்ளனர்.
ஓய்வுநிலை விரிவுரையாளர் நாச்சியார் செல்வநாயகம் தொகுப்புரையை ஆற்றுவார்.
இதன்போது ஆய்வுரைகளின் தொகுப்பான 'நாவலரின் தொலைநோக்கு' என்ற நூலினை வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் வெளியிட்டு வைக்கவுள்ளதுடன், முப்பது பாடசாலைகளுக்கு நாலலரின் திருவுருவச் சிலைகளும் வழங்கி வைக்கப்படும்.

0 comments:
Post a Comment