ஈழத்தின் மூத்த கவிஞரும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் வருகைதரு விரிவுரையாளருமான கல்வயல் வே.குமாரசாமி சனிக்கிழமை (10.12.2016) இரவு-10.45 மணியளவில் யாழில் காலமானார்.
யாழ்.கல்வயலைப் பிறப்பிடமாகவும்,சங்கத்தானையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கல்வயல் வே.குமாரசாமி தபால் திணைக்களத்தில் தபாலதிபராகவும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சிலகாலங்கள் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.
மரபு, நவீன கவிதையில் தன்னிகரில்லாத ஆளுமை பெற்றவராகவும், குழந்தைப் பாடல்களை எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர் கல்வயல் வே.குமாரசாமி.
அன்னாரது இறுதிக் கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சங்கத்தானையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment