இந்தியாவின் திருத்தணி முருகன் ஆலயத்தில் கடந்த புத்தாண்டு தினத்தன்று 20 இலட்சத்து 53 ஆயிரத்து 849 ரூபாய் காணிக்கைப் பணமாகக் கிடைத்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் டிசம்பர் 31 ஆம் தேதி திருப்படித் திருவிழாவும், புத்தாண்டன்று சிறப்புத் தரிசனமும் இடம்பெற்றது.
குறிப்பிட்ட தினங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா எனப் பல மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானைத் தரிசித்து மகிழ்ந்தனர்.
தரிசனத்தின் பின் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைத் தொகையைக் கணக்கிட்டதில் 20 லட்சத்து 53 ஆயிரத்து 849 ரூபாய் கிடைத்தது.
அத்துடன் பத்து கிராம் தங்கம், 1,060 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியிருந்தமாய் குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment