பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் குழு நாளை வியாழக்கிழமை(05) கூடவுள்ளது.
அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் இந்தக் குழு கவனம் செலுத்தவுள்ளது.
அரசாங்கத்தின் தன்மை, தேர்தல்முறைமை நிறைவேற்று அதிகாரத்தின் தன்மை, அதிகாரப் பகிர்வு குறித்த அடிப்படைகள், மதம், காணிகள் போன்ற ஆறு விடயங்கள் நாளைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் பரிந்துரைகள் இதுவரை கிடைக்கவில்லை என செயற்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.




0 comments:
Post a Comment