//]]>

Wednesday, January 4, 2017

தி.மு.க வின் செயல் தலைவரானார் ஸ்டாலின்: தமிழகத்தில் உற்சாகக் கொண்டாட்டம்(Photos)

தி.மு.க வின் செயல் தலைவராகக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் இன்று புதன்கிழமை(04) இடம்பெற்ற தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக நியமித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருணாநிதியின் புத்திரனும், தி.மு.க பொருளாளருமான ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவது உறுதி எனக் கூறப்பட்டது.திமுக பொதுக்குழு இன்று புதன்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கவில்லை

திமுக பொதுச்செயலர் அன்பழகன் இப்பொதுக்குழுத் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

இக் கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் செல்வி- ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தி.மு.க வின் செயல் தலைவராக ஸ்டாலினை  நியமித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்டாலின் செயல் தலைவரானதையடுத்துத்  தி.மு.கவினர்  பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும், வெடி கொளுத்தியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்டாலின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையைத் தொடர்ந்து கருணாநிதியிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவரானமையைத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment