//]]>

Wednesday, January 4, 2017

கடந்த வருடத்திலே கற்றுக்கொண்ட பாடங்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுவோம்

புது வருடம் என்பது புதிதாக நாம் பிறப்பதைக் குறிக்கிறது. கடந்த வருடத்திலே கற்றுக்கொண்ட பாடங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இந்த 2017 ஆண்டு நல்ல சிறந்த வருடமாக அமைவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் யாழ். சின்மயா மிஷன் நிறுவனத் தலைவர் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்யா சுவாமிகள். 
2017 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அவர் வாழ்த்துச் செய்தி தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  
எங்களிடம் இருக்கின்ற ஏதோ ஒரு தீய பழக்கத்தை அல்லது தேவையற்ற இயல்பை அல்லது பழக்கத்தை நாங்கள் இந்த வருடத்தில் ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் புது வருடத்திலே ஒரு புதிய நல்ல பழக்கத்தை எங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நாங்கள் செய்வோமாக இருந்தால் ஒவ்வொரு மனிதர்களும் செய்வார்களாக இருந்தால் அது தான் உண்மையான புது வருடம். 
புது வருடம் என்பது புதுப் பிறப்பு. நாங்கள் மீண்டும் பிறக்க வேண்டும். கடந்த வருடத்திலே செய்த தவறுகளை எல்லாம் சீர்திருத்திக் கொண்டு, சரிப்படுத்திக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்புக் கேட்டு எங்களை நாங்கள் நல்லவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். 
கடந்த வருடத்திலே எங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து இந்த வருடத்தை ஆரம்பிக்க வேண்டும். 
பிறந்திருக்கின்ற இந்த ஆங்கிலப்  புத்தாண்டானது  இந்த உலகத்திலே இருக்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என இறைவனுடைய திருவருளையும், குருவினுடைய குருவருளையும் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
உலகெல்லாம் பரந்து வாழ்கின்ற மக்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment