//]]>

Wednesday, January 4, 2017

ஈழத்தின் மூத்த கவிஞர் கல்வயல் குமாரசாமிக்கு யாழில் அஞ்சலிக் கூட்டம்

அண்மையில் காலமான மூத்த கவிஞர் கல்வயல் வே. குமாரசாமியின் அஞ்சலிக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை(07) பிற்பகல்- 3. 30 மணியளவில் இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள  தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

எழுத்தாளர் க. தணிகாசலம் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் அஞ்சலி உரைகளை கவிஞர் சோ. பத்மநாதன், கவிஞர் இ.த. ஜெயசீலன், கலாநிதி செ. திருநாவுக்கரசு, சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் கேட்டுள்ளனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment