//]]>

Thursday, January 5, 2017

யாழில் வெங்காயப் பூ வியாபாரம் அமோகம்(Photo)

யாழ்.குடாநாட்டில் தற்போது வெங்காயப் பூ வியாபாரம் அமோகமாக இடம்பெற்று வருகிறது. 

பெரும்போகத்துக்கெனப் பல்வேறு பகுதிகளிலும் பல நூற்றுக் கணக்கான பரப்பளவில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு செய்கை பண்ணப்பட்டுள்ள வெங்காயப் பூக்கள் விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்டுத் தற்போது குடாநாட்டின் சந்தைகளுக்கு அதிகளவில் எடுத்து வரப்படுகிறது. 

யாழ்.குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை, சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் பொதுச் சந்தைகளில் தற்போது ஒரு கிலோ வெங்காயப் பூ 100 ரூபா முதல் 120 ரூபா வரை விற்பனையாகிறது. சந்தைகளிற்கு எடுத்து வரப்படும் வெங்காயப் பூக்களைப் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து செல்வதை அவதானிக்க முடிகிறது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment