யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பத்து இந்திய மீனவர்கள் இன்று வியாழக்கிழமை(05) அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு வடக்குக் கடற்பரப்பில் சுமார் ஆறு கடல் மைல் தொலைவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து இரண்டு ரோலர் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தின் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதானவர்களாவார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




0 comments:
Post a Comment