பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா மீதான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை(27) வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் உட்பட ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து ட்ரயல் அட்பார்(நீதாய விளக்கம்) கொண்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
மாணவி மீது வன்புணர்வு புரிந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நான்கு பேரும், குற்றச்சாட்டுக்கு உடந்தையாகச் செயற்பட்ட மூன்று பேரும் என மொத்தமாக ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதலாவது, ஏழாவது சந்தேகநபர்கள் போதியளவு சாட்சியங்கள் எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தலைமையிலான திருகோணம லை நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூன்று தமிழ் நீதிபதிகளைக் கொண்ட ட்ரயல் அட்பார்(நீதாய விளக்கம்) கொண்ட தீர்ப்பாயம் யாழ். மேல் நீதிமன்றக் கட்டத் தொகுதியில் வைத்து மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
வித்தியா படுகொலை தொடர்பான தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதியைச் சூழ பலத்த பொலிஸ் மற்றும் அதிரடிப்படைப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment