இயற்கையை இனிய தெய்வங்களாக வழிபட்டவர்கள் தமிழர்கள். இயற்கை எமக்குத் தந்த வாழ்வுக்கு நன்றி கூறும் நன்னாளாகத் தைப்பொங்கல் திருநாளைப் போற்றி வழிபடுவது தமிழர் மரபாகும். பாடுபட்டு உழைக்கும் உழவர் தம் பெருமையை உணர்வு பூர்வமாகப் போற்றும் நாளாக இத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பாடுபட்டு உழைக்கும் உழவர் தம் பெருமையை உணர்வு பூர்வமாகப் போற்றும் நாளாகவும் இந்நன்னாள் திகழ்கிறது. தாம் வாழும் இல்லங்களின் முற்றத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பொங்கல் பொங்கிப் படைப்பதும், உறவினர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துப் பரிமாறி உண்பதுவும், அன்பைப் பெருக்கி அயலை நேசித்தலும் வழக்கமாகும் . உறவை வலிமைப்படுத்தும் நாளாகவும் இத் திருநாளைப் பேணி வருவது எமது பண்பாடாகும்
தைப்பொங்கல் திருநாளை நாமனைவரும் இயற்கைக்கு நன்றி கூறும் திருநாளாகப் பேணிப் போற்றுவதுடன் எமது உறவுகளை வலுப்படுத்தும் நாளாகவும் கொண்டாடுவோம்.
"தைபிறந்தால் வழி பிறக்கும்" எனும் முதுமொழியினை எம் மனதிற் கொண்டு தமிழ்மக்களாகிய எம்மனைவருக்கும் புதுவழிபிறக்க மனங்களால் ஒன்றிணைவோம்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் ஈழத்தமிழர்கள், தொப்புள் கொடி உறவுகளான தமிழகமக்கள் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் சொந்தங்கள் அனைவருக்கும் 'Jaffna Vision' சார்பாக எமது இதயபூர்வமான பொங்கல் நல்வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment