//]]>

Saturday, December 10, 2016

மீண்டெழும் கிளிநொச்சி: குடிசைக் கைத்தொழிலில் சாதிக்கும் குடும்பஸ்தர் (Photos)


போர்க் காலங்களில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மக்களில் குறிப்பிட்ட பகுதியினர் தங்கள் அயராத சொந்த முயற்சியின் பலனாக சிறு கைத்தொழில் முயற்சிகளின் ஊடாக தங்களது பொருளாதார தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் பிள்ளையை இழந்த குடும்பம் ஒன்று கிளிநொச்சி தர்மபுரத்தில் தங்களது கிராமத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை நம்பி "விளக்குமாறு, தும்புத்தடி, மிதியடி" போன்றவற்றை குடிசைக் கைத்தொழில் மூலம் உற்பத்தி செய்து வருகின்றனர்.

கணவரின் முயற்சிக்கு மனைவியும் துணையாக இருந்து உதவி புரிகிறார்.

சிலர் இவரது உற்பத்தியினை வந்தும் கொள்வனவு செய்கின்றனர். மீதியை இவர் வெளியில் கொண்டு சென்றும் சந்தைப்படுத்துகின்றார்.

இவரால் ஈர்க்கில் கிழிக்கின்றவர், தடி வெட்டுகின்றவர், தும்பு கொடுக்கின்றவர், வர்ணம் பூசுகின்றவர் என பலருக்கு இங்கும் அவரவர் வீடுகளிலும் சிறிய வருமானம் கிடைக்கின்றது,

குடிசைக்கைத்தொழிலில் மூலம் தனது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டுள்ளார்.

நம் கிராமங்களில்தான் இந்த நம்பிக்கை தரும் முயற்சியாளரும் இயந்திரமயப்படுத்தினால் சிகரங்களை இவர் தொடக்கூடும்.

எங்கள் மண்ணின் முயற்சியாளர் இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்.

நன்றி: பொன்காந்தன்-






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment