ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, சிறிலங்கா தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிலங்காவில் நல்லிணக்கம், நீதி, மறுசீரமைப்பு வாக்குறுதிகள் உண்மையாவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷர், சிறிலங்கா அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வரையில் அனைத்துலக கண்காணிப்பு தொடருவதை உறுதிப்படுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், உறுதியான- காத்திரமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment