சுனாமிப் பேரலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை(26) யாழ்.காங்கேசன்துறை வீதி தெல்லிப்பழையிலுள்ள சிற்பாலயம் கலைக் கூடத்தில் "மீண்டும் எழுவோம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒரு கட்டமாக இடம்பெற்ற ஆய்வரங்கம் நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்தினார்.
கருத்துரையின் நிறைவில் கடலம்மா.....உன் கருணை எங்கே போனது அம்மா....கடல் போலப் பெருமனசு கரைகள் எங்கு தொலைந்தது அம்மா?, எங்கள் கண்ணீரே கடலானது அம்மா..... என ஆரம்பித்துப் பாடல் பாடினார்.
அவர் குறித்த பாடலை அனுபவித்து உணர்வுபூர்வமாகப் பாடிய விதம் அங்கு கூடியிருந்த சுனாமியால் தமது உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் உள்ளிட்ட பலரதும் கண்களில் கண்ணீரை வரவழைத்ததுடன், சுனாமியின் வடுக்களை மனக் கண் கொண்டு வருவதாகவும் அமைந்திருந்தமையால் சபையே சோகத்தில் மூழ்கியது.
0 comments:
Post a Comment