வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி நேற்று முன்தினம் திங்கட்கிழமை(27) யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று புதன்கிழமை(01) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
கடந்த-2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இந்தத் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பட்டதாரிகள் வீதியிலேயே சமைத்து, வீதியிலேயே உண்டு, வீதியிலேயே உறங்கும் அவல நிலையைப் பொறுப்பு வாய்ந்த அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ கண்டு கொள்ளாமை வேதனையளிப்பதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment