ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த யாழ். உடுப்பிட்டி நாவலடிப் பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று(26) உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த-22 ஆம் திகதி ஒருவித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த சிறுவனுக்குக் காய்ச்சல் அதிகரித்த நிலையில் 23 ஆம் திகதி பருத்தித் துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அன்றைய தினம் மாலையே மேற்படி சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மூன்று நாட்களாகச் சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சிறுவன் உயிரிழந்தான்.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உயிரிழந்த சிறுவனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சிறுவனின் உயிரிழப்பு உடுப்பிட்டிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment