யாழ். கொக்குவிலில் இன்று(26) பிற்பகல்- 04.30 மணியளவில் பிரமாண்டமான முறையில் இடம்பெறவிருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் நினைவு தினமும் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வும் யாழ். பொலிஸாரினால் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நிகழ்வின் பிரதான ஏற்பாட்டாளரைக் கைது செய்யவும் பொலிஸார் முயன்றுள்ளனர். குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்புலமாகச் செயற்பட்டுள்ளது எனக் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்.....
0 comments:
Post a Comment