யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் சுனாமிப் பேரலையின் 13 ஆவது ஆண்டின் தேசிய பாதுகாப்புத் தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை(26) காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். மாவட்டச் செயலக முன்றலில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சுனாமிப் பேரலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சர்வமதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment