யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மையங்களை நிர்மாணிக்க வடமாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம், யாழ்.கச்சாய்த் துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள சாளம்பன் தீவுப்பகுதியில் சுற்றுலா மையத்தை நிர்மாணிக்க வடக்கு மாகாண முதலமைச்சு அலுவலகம் நடவ டிக்கை மேற்கொண்டுள்ளது.
குறித்த சுற்றுலா மையங்களை நிர்மாணிக்க சுமார்- 75 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இருக்கைகள், சுற்றுலா செல்பவர்கள் நீரில் பயணம் செய்ய இயந்திரப் படகுகள், நிழற்குடைகள் உட்பட ஏனைய தேவைகளும் நிறைவேற்றப்படும் எனத் தெரிய வருகிறது.
குறித்த வேலைத் திட்டமும், அதன் பராமரிப்புக்களும் சாவகச்சேரிப் பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment