//]]>

Friday, March 3, 2017

யாழில் சமகால சர்வதேச விவாதங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்


சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் "இறுதிக் குறிக்கோள் நிலைச் சமுதாயம்: வரலாற்றில் மனித உரிமைகள்" எனும் தலைப்பில் சமகால சர்வதேச விவாதங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் களமானது  எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (05) பிற்பகல்- 3.30மணியளவில் இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில்  சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் ச. தனுஜன் தொடக்கவுரையினை ஆற்றவுள்ளதுடன், அறிமுக உரையினை அகிலன் கதிர்காமர் ஆற்றவுள்ளார். 

சாமுவல் மொய்ன் அவர்களால் எழுதப்பட்டு ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் 2010 இல் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் பற்றி ஆராய்கின்ற 'The Last Utopia: Human Rights in History' என்ற நூலானது, மனித உரிமைகளினுடைய வரலாற்று ரீதியான எழுச்சி தொடர்பான எமது புரிதலையும் கேள்விக்குட்படுத்துகிறது. 

மனித உரிமைகள் ஒரு அரசியல் இலக்காக நோக்கப்படுவதனையும், அது தற்கால அதிகாரத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கப்படுவதனையும், சமூக மாற்றத்துக்கான ஓர் இயக்கமாக அது விளங்கிக்கொள்ளப்படுவதனையும் இந்த நூல் விமர்சிக்கிறது.  

இந்த நூலின் சாராம்சம் தொடர்பில் முதல் நாற்பது நிமிடங்களுக்குள் தமிழிலே வழங்கப்படும். அதனை அடுத்துள்ள 90 நிமிடங்களுக்கு  மனித உரிமைகளின் வரலாறு தொடர்பாகவும், தற்காலச் சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் பண்புகள் தொடர்பாகவும், இன்றைய இலங்கையில் மனித உரிமைகள் எதனைப் பற்றியதாக இருக்கிறது? என்பது தொடர்பாகவும் திறந்த கலந்துரையாடல் இடம்பெறும்.     

இந்த நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment