//]]>

Monday, February 5, 2018

யாழில் ஒன்பது வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்

ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுமியின் கழுத்துப் பகுதியில் ஊஞ்சலின் கயிறு இறுக்கியதில் ஒன்பது வயதுச் சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(04) யாழ். திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி சிறுமி ஊஞ்சலில் இருந்து கொண்டு ஊஞ்சல் கயிற்றைச் சுற்றி விளையாடியுள்ளார். இதன் போது ஊஞ்சல் கயிறு குறித்த சிறுமியைக் கடுமையாக அழுத்தியுள்ளது. இதனால், சிறுமிக்குத் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும்  சிகிச்சை பலனின்றி சிறுமி அங்கு உயிரிழந்துள்ளார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment