//]]>

Monday, February 5, 2018

வடக்கு முதல்வரின் முக்கிய வலியுறுத்தல்

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் போது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரமன்றி அனைத்து மாகாணங்களுக்கும் சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை. வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகளுக்கு மாத்திரம் வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எனக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முதலில் மாகாணசபையுடன் கலந்தாலோசனை நடாத்த வேண்டும். அதனுடன் இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment