ஜோ.ஜெஸ்ரின் எழுதி நெறியாழ்கை செய்த "சுனாமி 12" எனும் ஆற்றுகை இயற்கையை நாம் அழித்தால் இயற்கையினாலே நாம் அழிவோம் எனும் கருப்பெருளில் 26.12.2016 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
வடமாகாண இயற்கை பேரிடர் தணிப்புத்தினத்தை முன்னிட்டு விவசாய, கமநல சேவைகள்,கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அவிபிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வு விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சாந்தி சிறீகந்தராஜாவும் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகவும், மாகாணசபை உறுப்பினர்களான ஆ.சி.து.ரவிகரன், க.சிவநேசன், யாசீன் ஜவாஹிர், ஆ.புவனேஸ்வரன் மற்றும் முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா ஆகியோரும் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சுனாமியால் இறந்த மக்களுக்கு ஒளி ஏற்றியும் சிறப்புரையாற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
இதில் சிறப்பு நிகழ்வாக யாழ் ராகஸ்வரம் இசைமன்றத்தின் தயாரிப்பாக "சுனாமி 12" ஆற்றுகை நிகழ்தப்பட்டது.
0 comments:
Post a Comment