தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று வெள்ளிக்கிழமை(23) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுச் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் -22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் சாட்சியமளிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்துத் தொகுப்புரைகள் ஆற்றுப்படுத்தப்பட்டன.
தொகுப்புரைகள் நேற்று மாலை நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பினை ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க தீர்ப்பளித்தார். இதனடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment