//]]>

Saturday, December 24, 2016

ஒற்றையாட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியலமைப்புக்கு அனுமதியில்லை ; ஜனாதிபதி திட்டவட்டம்


ஒற்றையாட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியலமைப்புக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட உலக ஸ்ரீலங்கா மன்றத்திடம் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் நுவன் பலன்துவ தெரிவித்துள்ளார்.

செனட் சபையொன்றை உருவாக்குதல், ஆளுநருக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட உப குழுக்களின் பரிந்துரைகள் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறித்துக் கேள்வி எழுப்பிய போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் ஒற்றையாட்சிக்குப்  பங்கம் விளைவிக்கும் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நுவன் பலன்துவ மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment