எதிர்வரும் காலங்களில் தனியார் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்காதிருக்கப் பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அனைத்துப் பொலிஸ் பிரிவுகளிலும் இடம்பெறுகின்ற சம்பவங்களை மின்னஞ்சலூடாக அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களுக்குப் பொலிஸ் தலைமையகம் வழங்கியது.
தவிர, பொலிஸ் தலைமையகத்தில் ஊடகப் பிரிவொன்றை உருவாக்கி இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வந்தது.
தேவையேற்படின் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அது பெயரளவு நிலையில் மாத்திரமேயிருக்கின்றது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கும் போது தனியார் ஊடகங்களுக்குத் தகவல்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment