//]]>

Thursday, December 1, 2016

'நாடா' சூறாவளி யாழ்.குடாநாட்டில் மையம்: பொது மக்களே அவதானம்! (Video, Photos)


'நாடா' சூறாவளி தற்போது யாழ்.குடாநாட்டில் மையம் கொண்டுள்ள காரணத்தால் இன்று வியாழக்கிழமை(01) அதிகாலை முதல் யாழில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், அடை மழையும் பொழிந்து வருகிறது. 

பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. 

நாடா சூறாவளி காரணமாகப் பலவிடங்களிலும் பயன்தரு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

'நாடா' சூறாவளி தற்போது யாழ். மாவட்டத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக மழைவீழ்ச்சி எதிர்வரும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக நீடிக்கும் எனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்துள்ளார்.

 'நாடா' சூறாவளியுடன் கூடிய காலநிலை காரணமாக மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறைக் கடற்பிராந்தியத்தில் மூன்று மீற்றர் உயரத்துக்கு கடல் அலை மேலெழும்பும் எனவும் தெரிவித்துள்ள அவர்  சூறாவளி தொடர்பில் மக்களை அவதானமாகவிருக்குமாறு கேட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment