இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பின்னர் சடலங்கள் எதுவும் கண்டு மீட்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் இறுதியாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் 212 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 78 பேரை தொடர்ந்து காணவில்லை என அறிக்கையிடப்பட்டுள்ளன.
அனர்த்தம் ஏற்பட்டு இரு வாரங்களாகின்ற நிலையில் காணவில்லை என அறிக்கையிடப்பட்டவர்களும் இறந்திருக்கலாம் என அவர்களின் உறவினர்களினால் நம்பப்படுகின்றது.
இந்த அனர்த்தம் தொடர்பாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையில் மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் 1,54 ,630 குடும்பங்களை சேர்ந்த 6,01, 177 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
4 ,017 குடும்பங்களை சேர்ந்த 14,741 பேர் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். 2,999 முழுமையாகவும் 19 ,508 பகுதியளவிலும் என 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சப்ரகமுவ மாகாணம் ரத்தினபுரி மாவட்டத்திலே கூடுதலான இழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை - 87 பேர் .மேலும் 14 பேரை காணவில்லை. 54 , 757 குடும்பங்களை சேர்ந்த 2 .11, 814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் 66 மரணங்களுடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 48 பேர் என பிந்திய தகவலில் அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் 50 ,966 குடும்பங்களை சேர்ந்த 1,93 ,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
0 comments:
Post a Comment