//]]>

Friday, January 13, 2017

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏழாலையில் மாபெரும் இரத்ததான முகாம்



தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நாளை-14 ஆம் திகதி சனிக்கிழமை ஏழாலை புனித இசிதோர் தேவாலய மண்டபத்தில் மாபெரும் இரத்த தான முகாம் இடம்பெறவுள்ளது. 

காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை நடைபெறவுள்ள இரத்ததான முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று இரத்தம் பெற்றுக் கொள்ளவுள்ளனர். 

குறித்த இரத்ததான முகாமில் குருதிக் கொடை வழங்க ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு உயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்புக் கேட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment