தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் மகத்தான ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டை முன்னெடுக்கும் முகமாக நடாத்தப்படுகின்ற கலை இலக்கிய ஆய்வரங்குத் தொடரின் முதலாவது ஆய்வரங்கு மக்கள் இலக்கிய வரிசையில் மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல் எனும் தலைப்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்-03.30 மணி முதல் இல-62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் தலைமை உரையினை எழுத்தாளர் ஐ. சாந்தனும், ஆய்வுரையினை எழுத்தாளர் க. தணிகாசலமும் நிகழ்த்தவுள்ளனர். ஆய்வுரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.
இந்த ஆய்வரங்கில் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment