யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினது படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளையும் இந்த மாதம்- 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று வெள்ளிக்கிழமை(13) உத்தரவிட்டா ர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார் .
யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் -20 ஆம் திகதி பொலிஸாரினால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் இருவர் பலியாகியிருந்தனர். குறித்த சம்பவத்தில் மாணவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் எனப் பிரேத பரிசோதனைகளிலிருந்து தெரியவந்தது.
இதனையடுத்துக் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment