//]]>

Friday, January 13, 2017

பொங்கலை முன்னிட்டு யாழ்.மாவட்டச் சிகை அலங்கரிப்பு நிலையங்களை மூட அறிவுறுத்தல்


யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்துச் சிகை அலங்கரிப்பு நிலையங்கள்(சலூன்) தைப்பொங்கலை முன்னிட்டு நாளை சனிக்கிழமை(14) மூட வேண்டும் என யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.  

அத்துடன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்றும் மூட வேண்டுமெனவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது. 

மீறும் சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment