வடமராட்சியின் பருத்தித்துறை, கரவெட்டிப் பிரதேசசெயலாளர் ஆகிய பிரிவுகளைச்சேர்ந்த சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் இன்று செவ்வாய்க்கிழமை(24) முற்பகல்- 10 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் இடம்பெற்றன.
நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.இதன் போது யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் 2016ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அலுவலகத் தளபாடங்கள் மற்றும் அலுமாரிகள் என்பவற்றைச் சங்க நிர்வாகிகளிடம் சம்பிரதாயபூர்வமாகக் கையளித்தார்.
அத்துடன் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், கரவெட்டிப் பிரதேசசெயலாளர் எஸ். சிவசிறி, சிகை ஒப்பனையாளர் சங்க சம்மேளனத்தலைவர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment