தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை(24) உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்குத் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டை நிராகரிப்பதாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை அகற்றி எதிர்வரும் மார்ச் மாதம்- 03 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை நிராகரித்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட மனு குறித்த விசாரணையின் பின்னர் இந்த மனுவைக் குறித்த வழக்கு விசாரணைக் கோவைக்குள் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment