கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசிக்கும் கராளசிங்கம் குலேந்திரன் என்னும் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வருகின்றார்.
இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி மாலை ஊற்றுப்புலத்தில் தனது சகோதரியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பின்னர் இரவாகியும் வீட்டிற்கு திரும்பாமையினால் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளனர்.
மறு நாள் காலை குறித்த முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதைப்போலவே சில நட்களின் முன்னர் திருவையாறு பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளியான முருகையா தவவேந்தன் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டின் இரண்டாவது போராளியின் கைது இதுவாகும்.
இறுதி யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளை மீண்டும் இலக்கு வைப்பது, முன்னாள் போராளிகள் மத்தியில் பெரும் பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment