கியூபாவின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று (திங்கட்கிழமை) வட கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, "ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரசு அலுவலகங்களின் வெளியே வட கொரியாவின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். புதன்கிழமைவரை ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு வட கொரியாவில் துக்கம் அனுசரிக்கப்படும்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணச் செய்தியை அறிந்தவுடன் வட கொரிய அரசு சார்பாக இரங்கல் செய்தி ஃபிடலின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு தெரிவிக்கப்பட்டது. கியூபாவிற்கும், வட கொரியாவுக்கும் இடையேயான நட்பு என்றும் நீடிக்கக் கூடியது" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்ப்பதில் கியூபாவும், வட கொரியாவும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment