//]]>

Wednesday, January 10, 2018

பிற்போடப்பட்ட தபால்மூல வாக்குகள் விநியோக நடவடிக்கை

நாளைய தினம் வியாழக்கிழமை (11) நடைபெறவிருந்த தபால் மூல வாக்குகள் விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி-13 ஆம் திகதிக்குப்  பிற்போடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்குகளுடன் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் பெயர்ப் பட்டியலை அச்சிடுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாகப் பணிகள் தாமதமடைந்தமையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment