//]]>

Monday, February 6, 2017

ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக வல்வையில் நீச்சல் தடாகம்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை



“வடக்கில் சுற்றுலாத் தலங்களைப் புனரமைக்கும் திட்டத்தில் வடக்கின்
பல்வேறு இடங்களிலும் சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட்டு
வருகின்றன.

அந்த வகையில் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையின் ஊடாக கோடிக்கரையை அடைந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களின் பாரியார், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் பெரிய தந்தையின் மகள் என்ற காரணத்தினால், அவரது நினைவாக ஆரம்பத்தில் அவரது குடும்ப நிதியில் இருந்து 27 மில்லியன் ரூபா
நிதியில் இந் நீச்சல் தடாகம் அமைக்கப்பட இருந்த போதும் பின்னர் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் முயற்சியின் காரணமாக இவ்வருடம் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க நிதியில் இருந்து அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

வடமாகாண சபையின் மாகாண குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் இந்த அழகான கடற்கரையை சிறந்த ஒரு சுற்றுலாத்தலமாக அமைத்துள்ளது. இதே இடத்தில் வெகு விரைவில்
ஆனந்தன் நினைவாக நீச்சல்  தடாகமும் அமைக்கப்படும்….”

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் அமைக்கப்பட்டுள்ள ரேவடி உல்லாசக் கடற்கரை மைதானம் நேற்று  05.02.2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 5.00 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் பொது மக்களின் பாவனைக்காகத் திறந்து வைத்து உரையாற்றும் பொழுதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் செயலாளர் சி.பிரசாத் தலைமையில் நடைபெற்றபொழுது, வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரட்ணம், வடமாகாண சபையின் செயலாளர் திருமதி.விஜயலக்சுமி கேதீஸ்வரன், உட்படப் பல அரச உயர் அதிகாரிகளுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர், வல்வெடடித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள், மாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம், முன்னாள் நகர பிதா ந.அனந்தராஜ் மற்றும் கல்வியாளர்கள் ஆலோசனைச் சபை உறுப்பினர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா நிறைவில் ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் திரு.சுலக்சனின் ஏற்புரை இடம் பெற்றது.

2014 ஆம் ஆண்டில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை இயங்கிய காலத்தில் சில அரசியல்வாதிகளின் பதவிப் போட்டி மற்றும் உட்பூசல்கள் காரணமாக சபையில் தொடர்ச்சியாகக் குழப்பங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபை இல்லாததால், அரச அதிகாரி ஒருவரின் தலைமையில் எவ்வித தலையீடுகளும் அற்ற நிலையில் வல்வெட்டித்துறையில் மிகச்சிறப்பான முறையில் அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment